Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எண்ணெய் கையிருப்பை அதிகரிக்க ஆசிய நாடுகளுக்கு ஜப்பான் வலியுறுத்தல்

எண்ணெய் கையிருப்பை அதிகரிக்க ஆசிய நாடுகளுக்கு ஜப்பான் வலியுறுத்தல்

மத்திய கிழக்கில் போர் தொடங்கியதிலிருந்து, மாற்று நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயைப் பெற ஜப்பான் முயன்று வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

எண்ணெய் உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் தங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக ஆசிய நாடுகள் எண்ணெய் கையிருப்பையும் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் அதிகரிக்க வேண்டும் என்றும் ஜப்பான் வர்த்தக அமைச்சர் ரியோசெய் அகசாவா வலியுறுத்தியுள்ளார்.


சர்வதேச எரிசக்தி மன்றக் கூட்டத்தில் பேசிய அவர், எண்ணெய், எரிவாயு பயன்பாட்டைக் குறைப்பதைவிட எரிசக்திப் பாதுகாப்புக்கு தற்போது அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை நிலைப்படுத்த, மத்திய கிழக்கு எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கும் ஆசிய இறக்குமதி நாடுகளுக்கும் இடையே பாலமாகச் செயல்பட ஜப்பான் விரும்புகிறது.

எரிசக்தி விநியோகப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஜப்பான் தலைமையிலான ஆசிய பூஜ்ஜிய உமிழ்வு சமூகமும் தனது கவனத்தை எண்ணெய் விநியோகத்தை நோக்கித் திருப்பியுள்ளது. இதன்படி, ஆசியாவில் எண்ணெய் கையிருப்பை அதிகரிக்கவும், தேவை ஏற்படும்போது இருப்பிலிருந்து எண்ணெயை வெளியிடுவதில் ஒருங்கிணைந்து செயல்படவும் அந்த அமைப்பு இந்த மாதத் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டது.

சர்வதேச எரிசக்தி முகமையின் ஒருங்கிணைப்பில், 40 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் தயாரிப்புகளைச் சர்வதேச அளவில் வெளியிடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஜப்பான் தனது உத்திசார் எண்ணெய் இருப்பிலிருந்து கச்சா எண்ணெயை வெளியிட்டது.

உலகின் மூன்றாவது பெரிய உத்திசார் எண்ணெய் கையிருப்பைக் கொண்ட ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் ஏப்ரல் மாத மதிப்பீட்டின்படி, சீனாவிடம் 139.7 கோடி பீப்பாய் எண்ணெய் இருப்பும், அமெரிக்காவிடம் 41.3 கோடி பீப்பாய் இருப்பும், ஜப்பானிடம் 26.3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் இருப்பும் உள்ளன.

மத்திய கிழக்கில் போர் தொடங்கியதிலிருந்து, மாற்று நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயைப் பெற ஜப்பான் முயன்று வருகிறது. அந்நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவை ஹார்முஸ் நீரிணை வழியாக மத்திய கிழக்கிலிருந்து பெறப்பட்டதால், எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்துவது ஜப்பானுக்கு முக்கிய சவாலாக மாறியுள்ளது.

முந்தைய செய்தி
தங்கத்தைக் குவிக்கும் சீனா - பின்னணி என்ன?
அடுத்த செய்தி
மக்களை கவர்ந்த உலக பூசணிக்காய் போட்டி - அதுவும் எங்கே பாருங்க..

தொடர்புடைய செய்திகள்